search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் பேரணி"

    • முசிறி ஜெயேந்திரா பள்ளியில் மண் வளத்தை வலியுறுத்தி மாணவர்கள் பேரணி சென்றனர்
    • துறையூர் ரோடு மற்றும் முக்கிய விதிகள் வழியாக சென்று தா.பேட்டை ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தை வந்தடைந்தது

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் ஸ்ரீஜெயேந்திர வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளி மற்றும் ஈஷா யோகா மையம் சார்பாக மண்வளம் காப்போம் மாணவர்கள் பேரணி மற்றும் மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.

    பேரணிக்கு பள்ளி தாளாளர் வடிவேல் தலைமை தலைமை தாங்கினார். ஈஷா யோகா பயிற்சி மைய சரவணன் பள்ளி துணைத்தலைவர் சந்தோஷ், நூலக வாசக வட்டத் தலைவர் அம்மன் சிவகுமார்,

    போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பேரணியில் கலந்துகொண்டனர்.

    இந்த பேரணி துறையூர் ரோடு மற்றும் முக்கிய விதிகள் வழியாக சென்று தா.பேட்டை ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தை வந்தடைந்தது. பின்னர் மாணவ, மாணவிகள் மண் காப்போம் உறுதிமொழி எடுத்தனர்.

    • வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி தங்களது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தினர்.
    • விடுதலைப் போராட்ட வீரர்கள், தேச தலைவர்கள், செஸ் ஒலிம்பியாட் சிறப்புகள் போன்ற வேடம் அணிந்து மாணவர்கள் சென்றனர்.

    வீரபாண்டி :

    75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருப்பூர் தாராபுரம் சாலை கோவில் வழி பகுதியில் உள்ள பிரண்ட்லைன் குழுமம் பள்ளி மாணவர்கள் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி தங்களது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தினர்.மேலும் திருப்பூர் - காங்கயம் சாலையில் பேரணியை நடத்தினர். பேரணியை பிரண்ட்லைன் குழும பள்ளிகளின் தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர் சிவகாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    விடுதலைப் போராட்ட வீரர்கள், தேச தலைவர்கள், செஸ் ஒலிம்பியாட் சிறப்புகள் போன்ற வேடம் அணிந்து மாணவர்கள் சென்றனர்.பேரணிக்கு திருப்பூர் நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு கொடுத்தனர்.

    • மாணவர்கள் சைக்கிளில் பேரணியாகச்சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
    • ஆசிரியர்கள் வரவேற்று மாணவர்களின் செயல்களை பாராட்டி மகிழ்ந்தனர்.

    திருப்பூர்,

    திருப்பூர், காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியின் மாணவர்கள் வலிமையான பாரதத்தை உருவாக்குவோம் என்ற கருத்தினை வலியுறுத்தியும் , உடல் நலத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும் பள்ளியில் செயல்படும் உடல்நல ஆரோக்கிய மன்றத்தினைச் சேர்ந்த சுமார் 50-க்கும் அதிகமான மாணவர்கள் சைக்கிளில் பேரணியாகச்சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி வழிகாட்டுதலின் படி தொடங்கிய இச்சைக்கிள் பேரணியைப் பள்ளியின் முதல்வர் பிரமோதினி, பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் மோகனா ஆகியோர் கொடியசைத்துத் துவக்கி வைத்தனர்.

    பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி நடந்த இப்பேரணி காந்திநகர், அங்கேரிபாளையம், ஜே.எஸ். கார்டன்,அனுப்பர்பாளையம் ஆகிய இடங்களுக்குச் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இறுதியாக பள்ளி வந்தடைந்த பேரணி குழுவினரை பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்று மாணவர்களின் செயல்களை பாராட்டி மகிழ்ந்தனர்.

    ×